மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் விமல்.. இயக்குனர் இவரா.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குடும்ப கதையில் கச்சிதமாக நடித்து ரசிகர்களையே பிரபலமானவர் விமல். அதன்படி இவர் நடித்த களவாணி, தேசிங்கு ராஜா, வாகை சூட வா திரைப்படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

இந்த நிலையில் சமீப காலமாக இவருடைய திரைப்படங்கள் சரியாக ஓடாததால் படவாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார். இதில் கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதன்படி, தற்போது மீண்டும் புதிய வெப் தொடரில் விமல் நடிக்க உள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இந்த வெப் தொடரை இயக்குனர் ராமு செல்லப்பா இயக்க உள்ளார்.

கிராமத்து  பின்னணியில் உருவாகும் இந்த தொடர் க்ரைம், த்ரில்லர் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த தொடரில் பிக் பாஸ் பாவ்னி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்போதைய இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vimal act in new web series


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->