வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம்!
Use household items to repel mosquitoes
வீட்டில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளதா? குறிப்பாக மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் இது மேலும் மோசமாக இருக்கும். இதன் விளைவாக மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா போன்ற ஆபத்தான தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க பலர் கொசு விரட்டி காயல்கள், கொசு விரட்டி திரவங்கள் போன்ற ரசாயன பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இது மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதை தடுக்க இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட சில எளிய முறைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் பொருட்களை சரியாக பயன்படுத்தினால் கொசுக்களை முழுவதும் விரட்ட முடியும்.
இயற்கையாக கொசுக்களை விரட்ட சில எளிய வழிகள்!
கற்பூரம் மற்றும் வேப்பிலை
கொசுக்களை விரட்ட, மாலை நேரங்களில் கதவு, ஜன்னல்கள் மூடிவிட்டு கற்பூரத்துடன் வேப்பிலை சேர்த்து பற்றவைத்து புகையை வீடு முழுவதும் பரப்ப வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் தடுக்கும்.
சாம்பிராணி புகை
சாம்பிராணி மட்டும் இல்லாமல், வீட்டிற்கு நறுமணம் தருவதோடு கொசுக்களை விரட்டவும் உதவும். வீட்டில் சாம்பிராணி புகையை பரவ செய்யுங்கள், இதனால் கொசுக்கள் நீங்கும்.
பூண்டு மற்றும் கற்பூரம் கலவை
4-5 பூண்டு பற்களை நசுக்கி, அதனுடன் சிறிதளவு எண்ணெய், கற்பூரம் சேர்த்து ஏற்றி, அதன் புகையை வீடு முழுவதும் பரப்பினால் கொசுக்கள் செத்து மடியும்.
துளசி, வேப்பிலை, கற்றாழை செடிகள்
வீட்டில் துளசி, வேம்பு, கற்றாழை போன்ற செடிகளை வளர்க்க வேண்டும். இதன் வாசனை கொசுக்களை தடுக்க உதவும். மேலும் கொசு கடித்தால், கற்றாழை ஜெல்லை தடவினால் அரிப்பு, வீக்கம் நீங்கும்.
மிளகு எண்ணெய் ஸ்ப்ரே
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் சேர்த்து, அதனுடன் மிளகு எண்ணெய் சில துளிகள் சேர்த்து தெளித்தால் கொசுக்கள் அதன் வாசனை தாங்க முடியாமல் வீட்டிலிருந்து ஓடிவிடும்.
கொசுக்களை விரட்ட ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல், வீட்டிலேயே கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்துங்கள். இது ஆரோக்கியத்துக்கும் நல்லது! இந்த எளிய முறைகளை முயற்சித்து கொசுக்களை விரட்டுங்கள்!
English Summary
Use household items to repel mosquitoes