நடிகர் விமலுக்கு என்னதான் ஆச்சு.? இணையத்தில் தீயாக பரவும் பதிவு.! - Seithipunal
Seithipunal


நடிகர் விமல் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது. 

பிரபல தமிழ் நடிகராக இருக்கும் விமல் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் களவாணி படத்தில் நடித்ததன் மூலம் தான் அவருக்கு பிரபல தன்மை கிடைத்தது. அதன் பின் களவாணி 2 திரைப்படம் கூட அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. 

தற்போதும் அவர் ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. 

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விமல் ஒரு சமூக வலைதள பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில், "நலமுடன் படப்பிடிப்பில் இருந்து." என்று விமல் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வதந்திகள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vimal Post viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->