குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை செலுத்தாத நடிகர் விமல்...ரூ.3.6 கோடியை 18%வட்டியுடன் திருப்பிச் செலுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னனி  நடிகராக திகழும் நடிகர் விமல், ஏ 3 வி பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தயாரிப்பில்  வெளியான "மன்னர் வகையறா" படத்துக்காக கோபி என்ற பைனான்சியரிடம், நடிகர் விமல்  5 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இந்த கடனில்  3 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த நிலையில், பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, , சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் 
3.6 கோடி ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட நடிகர் விமல் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், கடன் தொகையை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு நீதிபதி வேல் முருகன் உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vimal who did not pay the loan within the specified time ordered the court to pay back Rs 3.6 crore with 18% interest


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->