நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு விசாரணை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal



நடிகர் விஷால் வாங்கிய 21.29 கோடி கடனை லைகா நிறுவனம் செலுத்தி இருந்த நிலையில் அதனை நடிகர் விஷால் திருப்பி செலுத்தவில்லை. 

இது தொடர்பாக லைகா நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, வருகின்ற ஜூன் 28ஆம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

விசாரணையின் போது லைகா நிறுவனத்திற்கும் விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என நடிகர் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் சமரசத்திற்கு தயார் என விஷால் தரப்பில் தெரிவித்தாலும் ஆக்கபூர்வமாக எதையும் முன்னெடுக்கவில்லை என லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Vishal against case final hearing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->