சாதனையில் டேவிட் வார்னரை முந்த இன்னும் 79 ரன்கள் தேவை... அதிரடியில் கே.எல் ராகுல்!!!
79 more runs surpass David Warners record KL Rahul
IPL 2015 18வது சீசன் 10 அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 34 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

இதனிடையே, இன்று இந்த தொடரில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.அதில் அகமதாபாத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 35வது லீக் ஆட்டத்தில் 'சுப்மன் கில்' தலைமையிலான 'குஜராத் டைட்டன்ஸை', 'அக்சர் படேல்' தலைமையிலான 'டெல்லி கேப்பிடல்ஸ்' அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இப்போட்டியில் டெல்லி அணியின் வீரர் 'கே.எல்.ராகுல்' வார்னரின் மாபெரும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார்.
அதாவது, குஜராத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல் 79 ரன்களைச் எடுக்கும் பட்சத்தில் ஐ.பி.எல் தொடரில் 5000 ரன்கள் எடுத்த லிஸ்டை பூர்த்தி செய்வார். அதுமட்டுமின்றி, IPL வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்த வீரர் எனும் பெருமையையும் பெறுவார்.முன்பு 'டேவிட் வார்னர்' 135 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்ததே இதுவரை சாதனையாக இருக்கிறது.
கே.எல். ராகுல் இதுவரை 137 போட்டிகளில் விளையாடி 128 இன்னிங்ஸ்களில் 4,921 ரன்களைக் குவித்துள்ளார். இதில் அவர் 4 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL தொடரில் அதிவேகமாக 5000 ரன்கள் எடுத்தவர்கள்:
டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ்
விராட் கோலி - 157 இன்னிங்ஸ்
டி வில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ்
ஷிகர் தவான் - 168 இன்னிங்ஸ்
சுரேஷ் ரெய்னா - 173 இன்னிங்ஸ்
English Summary
79 more runs surpass David Warners record KL Rahul