குஷ்புவின் எக்ஸ் பக்கம் ஹேக்!
BJP Kushpoo X hack
பாஜக தேசிய செயலாளரும், திரைப்பட நடிகையுமான குஷ்புவின் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவலை குஷ்பு தானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “என் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதால், கடந்த 9 மணி நேரமாக எனது கணக்கில் உள்நுழைய முடியவில்லை.
அந்த நேரத்துக்குள் நான் எந்தவொரு பதிவையும் வெளியிடவில்லை. கணக்கை மீட்டெடுக்கும் பணிகள் நடைமுறையில் உள்ளன. எனது எக்ஸ் பக்கத்தில் யாரேனும் ஏதாவது பதிவுகள் பார்த்தால் தயவுசெய்து அதை எனக்கு தெரிவிக்கவும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஹேக்கர்கள் அவரது கணக்கில் பதிவு செய்யப்பட்டிருந்த மின்னஞ்சல் முகவரியை மாற்றி விட்டதாகவும், இதுகுறித்து புகாரும் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கணக்கை மீட்டெடுக்க தொழில்நுட்ப நிபுணர்கள் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.