அரசியலுக்கு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்?.....இந்தி திணிப்பு கூடாது......கீர்த்தி சுரேஷ் OPEN TALK - Seithipunal
Seithipunal


அரசியலுக்கு வரும் ஆசை, எதிர்காலத்தில் வரலாம்  அல்லது வராமலும் போகலாம் என்று, நடிகை .கீர்த்தி சுரேஷ் சூசகமாக தெரிவித்துள்ளார். 
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ்,. தற்போது , 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகும் 'பேபி ஜான்' மூலம் முதன்முறையாக ஹிந்தி திரையுலகில் அடி எடுத்து வைத்திருக்கிறார். இதற்கிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள  'ரகு தாத்தா' திரைப்படம் வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் புரொமோஷனுக்காக கீர்த்தி சுரேஷ் மதுரை சென்றிருந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' ரகுதாத்தா' இந்தி திணிப்பு தொடர்பான படம் என்றும், தமிழ் நாட்டில் மட்டும்தான் இது போன்ற படங்களை பற்றிப் பேச முடியும் என்று கூறினார்.

மேலும் இந்திக்கு எதிராக பேசிவிட்டு இந்தியில் நடிப்பதாக பல சர்ச்சை எழுந்ததாக கூறிய அவர், இந்தி மொழியை நான் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பு கூடாது என்பதுதான் என் கருத்து, என்று கூறினார். தொடர்ந்து பேசிய  அவர், அரசியலுக்கு வரும் ஆசை இப்போதைக்கு இல்லை என்றும், எதிர்காலத்தில் வரலாம்  அல்லது வராமலும் போகலாம் என்று சூசகமாக தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Keerthy Suresh coming to politics Hindi should not be imposed Keerthy Suresh open talk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->