3% கேஷ்பேக் சலுகை! தமிழக ரயில் பயணிகள் கணவத்திற்கு:  - Seithipunal
Seithipunal


R-Wallet என்பது UTS (முன்பதிவு செய்யாத டிக்கெட் வாங்கும் முறை) மொபைல் செயலியில் உள்ள ஒரு வாலட் வசதியாகும். இது இந்திய ரெயில்வே பயணிகளுக்கு முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை எளிதில் வாங்கவும், தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களில் பணம் செலுத்தவும் உதவுகிறது.  

இப்போது, R-Wallet பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM (தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள்) மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3% கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

முன்பு, R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை இப்போது பயணிகள் டிக்கெட் எடுக்கும் போதே பெறலாம்.  

ரெயில்வே பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து, டிக்கெட் எடுப்பதை எளிதாக்க இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. UTS செயலியில் R-Wallet அல்லது ATVM மூலமாக டிக்கெட் வாங்குவோர் இந்த கேஷ்பேக் சலுகையை பெறலாம்.  

இந்த நடவடிக்கை பயணிகளை டிஜிட்டல் முறையை அதிகமாக பயன்படுத்த ஊக்குவிக்க மேலும் உதவியாக இருக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train tickets Cashback Offers  UTS mobile app


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->