அந்த சிசிடிவி கட்சியை வெளியிடுங்க... உண்மை தானே வெளிவரும் - ப. சிதம்பரம் போர்க்கொடி!
P Chidambaram say about Parliament incident
பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் விவகாரத்தை முன்னிட்டு, பா.ஜ.க. எம்.பி.க்களும், இண்டி கூட்டணி எம்.பி.க்களும் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 பா.ஜ.க. எம்.பி.க்கள் கீழே விழுந்து காயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகிறார்கள்.
தங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக பா.ஜ.க. எம்.பி.க்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இதன் அடிப்படையில், பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட, ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பாராளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "நுழைவாசலிலும் பாராளுமன்ற வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் உள்ள ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டியது தானே? அந்தப் பதிவுகளை வெளியிடுவதற்கு அரசு ஏன் மறுக்கிறது?
உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பதிவுகளை வெளியிட்டால் தெளிவாகத் தெரிந்துவிடுமே? 'வெளியிட வேண்டும்' அல்லது 'வெளியிட வேண்டாம்' என்ற இரண்டில் ஒன்று தானே பதிலாக இருக்க முடியம்?
நேரடியாகப் பதில் சொல்வதை ஏன் அரசு தவிர்க்கிறது? இந்தக் கோரிக்கைக்குப் பதில் சொல்லாமல் வாதப்பிரதிவாதம், வியாக்கியானம், தத்துவம் எல்லாம் எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
P Chidambaram say about Parliament incident