படையப்பா நடிகைக்கு 44 வயதில் தொழிலதிபருடன் திருமணம்?!. - Seithipunal
Seithipunal


படையப்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் லாவண்யா. இவர் பல தமிழ் திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். 90 கிட்ஸ் களின் ஃபேவரெட்டில் கண்டிப்பாக இவர் இருப்பார். சூரியவம்சம், ஜோடி, கண்ணுபட போகுதய்யா, சங்கமம்,  மிலிட்டரி, சமஸ்தானம் மற்றும் சுந்தரா ட்ராவல்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் தனது முத்திரையை பதித்து வருபவர் லாவண்யா. பிரபல  தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும். அருவி என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார். 44 வயதாகும் இவருக்கு தற்போது தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசன்னா என்ற தொழிலதிபரை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு சின்னத்திரை மற்றும் திரையுலகினர்  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தன.

இவர் திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் பெரும்பாலும் நேர்மறையான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தவர். அதன் காரணமாகவே ரசிகர்களின் அன்பு இன்னும் இவருக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress lavanya got married a bussinessman in tirupathi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->