நடிகர் விக்ரம் எப்படி இருக்கிறார்.? தங்கலான் பட நடிகை மாளவிகா மோகனன் விளக்கம்.? - Seithipunal
Seithipunal


கேஜிஎஃப் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து அங்கு நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தில் முதல்முறையாக சியான் விக்ரம் ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் இவருடன் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கே ஜி எஃப் தங்க சுரங்கங்களில் இத்திரைபடத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், சமீபத்தில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டதால் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.

இதில் தங்கலான் திரைப்படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் விக்ரம் சார் எப்படி இருக்கிறார் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன். தற்போது தங்களான் படத்தை திரும்பிப் பார்க்கும்போது விக்ரம் சார் இல்லாத கடினமான பயணத்தை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

 அவர் ஒவ்வொரு அடியிலும் கிட்டத்தட்ட ஒவ்வொரு அசைவிலும் எனக்கு உதவி இருக்கிறார் அவர் சுயநல மற்றவர் தன்னை சுற்றியுள்ள அனைவருமே மிகுந்த அக்கறை கொண்டவர். அதே போல் அவருடைய நகைச்சுவை உணர்வு வேற லெவல் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress malavika mohanan speech about Vikram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->