கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சி.. நயன்தாரா கர்ப்பமா.? என்னண்ணே சொல்றிங்க.?!  - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். சரத்குமாரின் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் தனது திறமையால் தற்போது தென்னிந்திய உலகில் லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளார். 

கடந்த 2015இல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. அதன் பின்னர், இருவரும் புரிந்துகொண்டு தற்போது 7 வருடங்களாக அவர்களது காதலை கோவில், குளங்கள், வெளிநாடு டூர் என்று சுற்றி வளர்த்து வருகின்றனர். 

இவர்களது காதல் பலரையும் வியக்க வைக்கும் விதமாக இருக்கும். இதற்கு முன்பு பல்வேறு காதல் சர்ச்சைகளில் நயன்தாரா சிக்கி இருந்தாலும் கூட தற்போது விக்னேஷ் சிவனுடன் அவரது காதல் நீடித்து நிலைத்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சமீபத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்பொழுது நயன்தாராவின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக் கூறி இருப்பார். அதில் நயன்தாராவின் வயிறு பெரியதாக இருப்பது போல இருக்கும். இதை கண்ட பலரும் நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் நயன்தாராவின் ரசிகர்கள் சிலர் இது மோசமான போஸ். அவர் கர்ப்பமாக இல்லை. நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்துள்ளார் எனும்பொழுது எப்படி அவர் கர்ப்பமாக இருக்க முடியும் என்று கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress nayanthara pregnancy rumour


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->