மீண்டும் காவல் அதிகாரி உடையில் கலக்க வரும் பிரபல நடிகை..! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!
actress nivetha pethuraj return to police dress
தமிழ் திரையுலகிற்கு ஒருநாள் கூத்து திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் இந்த திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் திரைப்படம் மற்றும் நடிகர் - இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடிச்சவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் திரைப்படத்தில் நடித்துள்ளார்., இந்த திரைப்படம் விரைவாக வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக தற்போது வளம்வர துவங்கியுள்ள நிவேதா., தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்க துவங்கியுள்ளார்.
மேலும்., டிக் டிக் திரைப்படத்தில் இராணுவ அதிகாரியாக நடித்திருந்த நிலையில்., திமிரு பிடிச்சவன் திரைப்படத்தில் காக்கிசட்டையில் காவல் அதிகாரியாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
இந்த நிலையில்., தடம் படத்துடைய தெலுங்கு ரிமேக் திரைப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., இந்த திரைப்படத்தில் இவர் காவல் அதிகாரியாகவே நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
actress nivetha pethuraj return to police dress