தம்மை கலாய்த்த நெட்டிசன்களை 'ஒரே ட்வீட்டில் ஆஃப் செய்த' ராஷ்மிகா மந்தனா.!
actress Rashmika Mandanna reply his troll meme
கடந்த 2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தானா. இந்த படம் செம்ம ஹிட்டானது. கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் தனது வெகுளியான நடிப்பால ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக மிகவும் இளம் வயதிலேயே வளர்ந்து நிற்கிறார்.
வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுடன் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான பீஷ்மா படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பீஷ்மா படத்தின் புரொமோஷனின்போது ராஷ்மிகா மந்தானா கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் ஒவ்வொரு போஸிற்கும் ஏற்றார்போல வடிவேலு புகைப்படத்தை வைத்து மீம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
அதை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராஷ்மிகா, “என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. வடிவேலு சோ க்யூட்” என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
actress Rashmika Mandanna reply his troll meme