அச்சச்சோ.. ரோஜாவுக்கு என்னாச்சு.? பொது இடத்தில் சரிந்து விழுந்த நடிகை.! வைரலாகும் வீடியோ.!
actress roja falling down video viral
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா. தன்னை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
செல்வமணி-ரோஜா தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மேலும், அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் நடிக்காமல் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரோஜா சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். நகரி தொகுதியில் நடிகை ரோஜா அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், ஆந்திராவில் அமைச்சராக வலம் வரும் இவர் தனது தொகுதி மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரோஜா சமீபத்தில் தொகுதியில் நடந்த கபடி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பெண்களுடன் சேர்ந்து கபடி ஆடிய போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
actress roja falling down video viral