மயிலாடுதுறையில் பரபரப்பு - ஒய்வு பெற்ற ஆசிரியைக்கு கத்திக்குத்து..!
man arrested for tried kill attack in mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுரா டெலிகாம் நகர் 2-வது கிராஸ் பகுதியில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி சேதுமாதவன் அவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியர் நிர்மலா தேவியுடன் வசித்து வந்தார். அவரது எதிர்வீட்டில் பொறியியல் பட்டதாரியான பிரேம் என்பவர் வசித்து வந்தார்.
இவர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் எதிர் எதிர் வீடு என்பதால், வாகனம் நிறுத்துதல், வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்தல் தொடர்பாக சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், இன்று வழக்கம் போல் நிர்மலா தேவி வீட்டிற்கு வெளியே தண்ணீர் தெளிப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது, மீண்டும் இளைஞர் பிரேமுக்கும், நிர்மலா தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பிரேம், வீட்டிற்குள் இருந்து காய்கறி கத்தியை எடுத்து வந்து, நிர்மலா தேவியை சராமாரியாக குத்தியுள்ளார். இதனால் வலி தாங்கமுடியாமல் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பிரேமை கற்கள் மற்றும் கட்டைகள் கொண்டு அடித்துள்ளனர்.
பின்னர் நிர்மலா தேவியை மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் பிரேமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
man arrested for tried kill attack in mayiladuthurai