அதெல்லாம் எதுக்குங்க! இப்படியே அப்படியே ஜாலியா இருக்கலாமே! அதிரவைத்த நடிகை சதா! - Seithipunal
Seithipunal


திருமணம் எல்லாம் எதற்குங்க, இப்படியே நிம்மதியா சந்தோஷமா இருந்துட்டு போயிடனும் என்று நடிகை சதா தெரிவித்துள்ளார்.

ஜெயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சதா, தொடர்ந்து எதிரி, அந்நியன், உன்னாலே உன்னாலே, நடிகர் அஜித்துடன் திருப்பதி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார். 

ஆனால், அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் மட்டும் ஏனோ சரியாக கிடைக்க இல்லை. அதற்க்கான காரணமும் தெரியவில்லை.

வழக்கமாக பட வாய்ப்பு இல்லை என்றால் சட்டுபுட்டுனு திருமணத்தை செய்து செட்டில் ஆக்கவேண்டியது தான் நடிகைகளின் வழக்கம். 

ஆனால், தற்போது 39 வயதாகும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தவிர்த்து வருவது குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து உள்ளார் நடிகை சதா. 

"திருமணம் செய்து கொண்டால் நாம் நம்முடைய சுதந்திரத்தை இழந்து விடுகிறோம். அதனால் தான் நான் திருமணம் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. 

இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொள்கிறேன். ஆனால் திருமணம் செய்து கொண்டால் இது முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை.

நம்மை புரிந்து கொள்பவர் நமக்கு லைப் பார்ட்னராக கிடைத்தால் நன்றாக இருக்கும். அப்படி அமையவில்லை என்றால் திருமண பந்தம் சரியாக இருக்காது. 

பலரும் இன்றைய காலகட்டத்தில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டு, அடுத்த சில நாட்களிலேயே பிரிந்து விடுகிறார்கள். பேசாமல் அதற்கு திருமணம் செய்யாமலேயே இருந்து விடலாம்" என்று நடிகை சதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்தால் சுதந்திரம் பறி போகும் என்று, நடிகை சதாவின் திருமண வழக்கை பற்றிய அச்சம் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா?  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Sadha fear about marriage life


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->