இருமுறை உடலுறவு..சென்னை மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்!
Sex twice Shocking twist in Chennai woman s murder
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மூதாட்டியும் தானும் மது அருந்திவிட்டு இரு முறை உடலுறவு கொண்டதாக கைதான மாற்றுத்திறனாளி முத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த 65 வயது லட்சுமி என்ற மூதாட்டி திடீரென காலையில் பார்க்கும் போது இறந்துகிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள். அந்த மூதாட்டியின் உடல் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி முத்து என்பவரை பிடித்து நீதான் மூதாட்டியை கொலை செய்தாய் என அவரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து அவரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில், மாற்றுத்திறனாளி முத்துவும் லட்சுமியும் இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினராம். இதையடுத்து இருவரும் இரு முறை உடலுறவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மூதாட்டியுடன் உறவு கொள்ள சென்ற போது அவர் உடல் அசைவின்றி கிடந்தார் என முத்து வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையில் லட்சுமியின் பிரேத பரிசோதனை முடிவில் மூதாட்டி கொலை செய்யப்படவில்லைஎன்றும் . இயற்கையாகவே மூதாட்டி மரணம் அடைந்திருக்கிறார்என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் அவருடைய உடலில் எந்த காயங்களும் இல்லை என தெரியவந்தது. எனவே அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் இதை கொலை சம்பவமாக கருதிய நிலையில் மூதாட்டியின் இறப்பிற்கான காரணங்களை போலீஸார் மேலும் ஆராய்ந்து வருகிறார்கள்.
அந்த மூதாட்டிக்கு ஏற்கெனவே பிபி, சுகர், இதயம் தொடர்பான பிரச்சினை இருந்திருக்கலாம். அவருக்கு குடிப்பழக்கமும் இருப்பதால் இரு முறை உடலுறவு என்பதை அவரது உடல் ஏற்கவில்லை. இதனால் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இந்த மூதாட்டி புழல் பகுதியை சேர்ந்தவர். எனினும் அவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்துவருவது தெரியவந்தது.
English Summary
Sex twice Shocking twist in Chennai woman s murder