தபால் பெட்டியைத் தூக்கிச் சென்ற நபர் - தென்காசியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலகரம் தபால் நிலையதிற்கு முன்பு இருந்த தபால் பெட்டியை நேற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தூக்கி கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் அதனை வீடியோ எடுத்தனர்.

மேலும், பொதுமக்கள் அந்த நபரிடம் இருந்து தபால் பெட்டியை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அந்தத் தகவலின்பேரில் தென்காசி போலீசார் விரைந்து சென்று, மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் இருந்த தபால் பெட்டியை மீட்டு மேலகரம் தபால் நிலையத்தில் வைத்தனர்.

இதற்கிடையே தபால் பெட்டியை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தூக்கி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man run with post box in tenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->