2 குழந்தைகளை தத்தெடுக்கும் நடிகை சமந்தா?  - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரியவகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான யசோதா, சாகுந்தலம், குஷி போன்ற திரைப்படங்கள் வெற்றி படமாக அமையவில்லை. 

மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு மையோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு சினிமாவில் இருந்து விலகி இருக்க நடிகை சமந்தா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சமந்தா நடிப்பது மட்டுமல்லாமல் 'பிரதியுஷா' எனும் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். 

இந்நிலையில் சமந்தா ஆதரவற்ற 2 குழந்தைகள் இந்த அமைப்பின் மூலம் தத்தெடுத்து வளர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது அவரை பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Samantha adopt 2 children


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->