மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்த நடிகை சமந்தா - ரசிகர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்த நடிகை சமந்தா - ரசிகர்கள் அதிர்ச்சி.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான சமந்தா மயோசிடிஸ் நோய்க்காக வெளிநாட்டில் தனது அம்மாவுடன் தங்கி தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். இருப்பினும், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள், ரீல்ஸ் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என பிஸியாகவே இருக்கிறார். 

இந்த நிலையில், நடிகை சமந்தா மருத்துவமனையில் இருந்து கையில் ஸ்ட்ரிப் ஏற்றி இருக்கும் புகைப்படத்தை காரணத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அதில், அவர் தெரிவித்திருப்பதாவது, ‘என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். இதன் மூலம், ரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிப்பு, தசை வலிமை, வைரஸ்களை எதிர்த்துப் போராடும் திறன், எலும்புகளுக்கு வலிமை உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் சமந்தா விரைவில் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முன்னதாக நடிகை சமந்தா சிகிச்சை பெற்றபோது அவருடைய தோலின் நிறம் மாறியது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress samantha again admitted hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->