ஆமா.. நான் தப்பு பண்ணிட்டேன் தான் - உண்மையை உடைத்த நடிகை சமந்தா!
Actress Samantha Say About life mistake
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
இவர் தமிழில் பாணா காத்தாடி, தெரி, அஞ்சான், இரும்புத்திரை, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தங்க மகன், 10 எண்றதுக்குள்ள, 24, சீமராஜா, யசோதா, காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு இவருக்கும், பிரபல நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவிற்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை நீடிக்காமல் கடந்த 2021- ஆம் ஆண்டில் இருவருக்கும் விவாகரத்து ஆனது.
இதன் பின்னர், சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக, வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து, சமந்தா தற்போது உடல் ஆரோக்கியம் குறித்து சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இது குறித்து ரசிகர் ஒருவர் சமூகவலைத்தளம் மூலமாக சமந்தா விடம், இதற்கு முன்னதாக நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் விளம்பரத்தில் நடித்தீர்கள்.
ஆனால் தற்போது உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு குறித்து வீடியோக்கள் பதிவு செய்துள்ளீர்கள். என்று விமர்சிக்கும் வகையில் கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த சமந்தா, நான் இதற்கு முன்னதாக சில விஷயங்கள் முழுமையாக புரியாமல் சில தவறுகள் செய்துள்ளேன்.
நான் இப்பொழுது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் எந்த பொருட்களின் விளம்பரத்திலும் நடிப்பதில்லை. இப்பொழுது நான் உடல் ஆரோக்கியம் குறித்து மட்டும்தான் பேசுகிறேன் என்று தெரிவித்தார்.
English Summary
Actress Samantha Say About life mistake