ஜப்பான் நிறுவனத்தில் இந்திய தூதரான பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் நிறுவனத்தில் இந்திய தூதரான பிரபல நடிகை.!

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த தமன்னா சிறிய இடைவேளைக்குப் பிறகு ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், வந்த ‘காவாலா’ பாடல் அவருக்கு புகழ் சேர்த்தது. 

இந்த நிலையில், தமன்னா தற்போது ஜப்பானின் ஷிசேடோ என்னும் அழகுசாதன நிறுவனத்தின் முதல் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இந்த விஷயம் குறித்து அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளதான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். 

இந்தியாவில் ஷிசேடோவின் முதல் பிராண்ட் தூதராக இருப்பதில் பெருமை அடைகிறேன். அழகு என்பது வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல, தங்கள் சொந்த மேனியின் நிறத்தில் தன்னம்பிக்கை பெறுவது என்று நம்புகிறேன். 

ஷிசேடோவின் ஸ்கின் கேர் குடும்பத்தில் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது’ என்றுத் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் ’காவாலா’ புகழ்தான் தமன்னாவை இங்கு கொண்டுவந்துள்ளது என்று வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress thamannah appointed ambassador of India in Japan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->