தாய்லாந்து டூரில், படு ஜாலியாக இருக்கும் வனிதா விஜயகுமார்.! வைரலாகும் புகைப்படங்கள்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் சந்திரலேகா திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் நட்சத்திர தம்பதிகளாக மஞ்சுளா மற்றும் விஜயகுமாரின் மூத்த மகளாவார். 

அதிகப்படியான சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா, சமீப காலமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார். மேலும், அவரது செயல்களால் அதிக அளவு விமர்சனங்களும் வந்தன. 

இதன் பின்னர் தான் நடிகை வனிதா விஜயகுமாருக்கு பீட்டர்பால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணம், லிவிங் டுகெதர் என்று ஏதேதோ விஷயங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டது. 

பின், இருவரும் 3 மாதங்களிலேயே பிரிந்து விட்டனர். தற்போது பர்சனல் பிரச்சனைகளை ஓரம் கட்டிவிட்டு சின்னத்திரை, வெள்ளித்திரை, யூடியூப்  என்று கலக்கி வருகிறார். இந்த நிலையில், வனிதா விஜயகுமார் தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress vanidha vijayakumar thailand tour photos


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->