"அடடே ஆச்சரியமா இருக்கே... அந்தக் காட்சியில் நடிக்க இரண்டு மணி நேரம் மும்தாஜ் அழுதார்?!
after 24 years a news about mumtaj debut film became viral in internet
டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான மோனிஷா என் மோனாலிசா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை மும்தாஜ். அந்தத் திரைப்படம் அவருக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்றாலும் இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதனைத் தொடர்ந்து சாக்லேட், ரோஜா கூட்டம், தாண்டவம் போன்ற திரைப்படங்களும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் முன்னணி கதாபாத்திரங்களிலும் ஒரு பாடலுக்கு பாடுவதற்கு இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. அதன்பிறகு மார்க்கெட் சரிந்ததால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார் இவர்.
விஜய் டிவியில் நடைபெறும் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கும் இவர் ஆன்மீக நெறிமுறைகளை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில் 24 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது வெளியாகியிருக்கிறது.
மோனிஷா என் மோனாலிசா என்ற திரைப்படத்தில் மும்தாஜ் கதாநாயகியாக நடிக்கும் போது நீச்சல் உடையில் நடிப்பது போன்ற ஒரு காட்சி படத்திலிருந்தது. அந்தக் காட்சியில் நடிப்பதற்கு தயங்கி மேக்கப் ரூமில் உட்கார்ந்து இரண்டு மணி நேரம் அழுது கொண்டிருந்தாராம். அப்போது படத்தின் இயக்குனரான டி ராஜேந்தர் தான் அவரை சமாதானப்படுத்தி அந்தக் காட்சியில் நடிக்க வைத்திருக்கிறார். இந்தச் செய்தி தற்போது பரவி வைரலாகி இருக்கிறது.
English Summary
after 24 years a news about mumtaj debut film became viral in internet