ஏன் நடவடிக்கை எடுக்கல? காவல்நிலையம் சென்று எச்சரிக்கை விடுத்த சவுக்கு சங்கர்! - Seithipunal
Seithipunal


தன்னை கைது செய்த போது தன்னிடம் இருந்த Apple airpod-யை காவல் உதவி ஆணையர் திருடிவிட்டதாக கடந்த 23 ஆம் தேதி ஹெனாம்பேட்டை காவல் நிலையத்தில்  சவுக்கு சங்கர் புகார் அளித்து இருந்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "கடந்த 17 டிசம்பர் 2024 அன்று, என்னை கைது செய்தபோது என்னிடம் இருந்து, தேனாம்பேட்டை உதவி ஆணையர் Apple airpod பறிமுதல் செய்தார். அதை பறிமுதல் செய்ததற்கான ஒப்புகையும் கொடுக்கவில்லை. 

அதை திருப்பியும் தரவில்லை என்பதால், என்னிடம் இருந்து Apple airpod ஐ திருடிய தேனாம்பெட்டை காவல் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்து, அதை மீட்டுத் தரும்படி, சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளேன்" என்று சவுக்கு சங்கர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விசாரிக்க காவல் நிலையம் சென்றதாகவும், ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியதுடன், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துவிட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Savukku sankar complaint against police update


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->