VIVO V50: ஸ்லிம்மான விவோ வி50 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
VIVO V50 launch in soon
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, தனது புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில், இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளது.
சிறப்பம்சங்கள்:
பேட்டரி: 6,000mAh பேட்டரி பிரிவில் இந்தியாவின் ஸ்லிம்மான ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என விவோ தெரிவித்துள்ளது.
டிசைன் & வண்ணங்கள்: விவோ V50, ரோஸ் ரெட், கிரே மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இதன் 3D ஸ்டார் டிசைன், சூரிய ஒளியிலும், சண்டை வெளிச்சத்திலும் ஒளிரும் தன்மை கொண்டதாக இருக்கும்.
டிஸ்ப்ளே: 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல்.
பிராசஸர்: ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 3 ப்ராசஸர்.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 15.
ரேம்: அதிகபட்சமாக 12ஜிபி ரேம்.
மெமரி: 256 ஸ்டோரேஜ் வேரியண்ட்.
கேமரா: மெயின் கேமரா மற்றும் செல்ஃபி கேமரா இரண்டும் 50 மெகாபிக்சலுடன் வெளிவரும் என தெரிகிறது.
இந்த போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.