நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Chennai High Court orders action to control the use of banned plastic in the Nilgiris
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், இன்னும் அதனை பொது மக்கள் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.
அதிலும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் வனவிலங்குகளின் நலன்கருதி முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அப்படி மீறுவோருக்கு தண்ட பணம் விதிக்கப்பட்டது.
இன்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால், அந்த பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களோடு பேருந்து வந்தால், அந்த பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
English Summary
Chennai High Court orders action to control the use of banned plastic in the Nilgiris