அஜித், விஜய் படங்களை மீண்டும் இயக்குவேன் - எஸ்.ஜே.சூர்யா பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் அவர் நிறைய படங்களை இயக்கினார். பின்னர் தானே படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். தற்போது எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். 

தெலுங்கு படங்கள் பலவற்றிலும் அவர் படுபிசியாக நடித்து வருகின்றார். இயக்குனராக எஸ்.ஜே. சூர்யா நிறைய வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் கூட அவர் நடிகரான பின்னர்தான் அவரை பலருக்கும் தெரியும். 

அதிலும் வில்லன் நடிகராக எஸ்.ஜே. சூர்யா மிரட்டும் தொணியில் நடிப்பது பலருக்கும் சுவாரசியமாக இருக்கும். நகைச்சுவை கலந்த வில்லனாக எஸ்.ஜே.சூர்யா இருப்பதால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் ‘வதந்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது வெப் சீரியசாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் டிசம்பர் 2ஆம் தேதி அமேசானில் வெளியாக உள்ளது. 

இந்த நிலையில், இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், 'நீ நல்லது செய்தால் உனக்கு நல்லது நடக்கும் என்பார்கள். நான் நடிப்பதற்குத்தான் வந்தேன்.  தற்போதுதான் எனக்கு அமைந்துள்ளது. நான் உதவி இயக்குநர் மூலமாக இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டேன். 

சிறந்த இயக்குநர்கள் உடன் நடிக்கும் போது தான் ஒருவர் சிறந்த நடிகராக உருவாக முடியும். இப்போது, என்னை வைத்து இயக்கவே எனக்கு நேரமில்லை. கடவுள் அருள் இருந்தால் நிச்சயம் விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன்' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Again direct Ajith and Vijay movies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->