#சற்றுமுன் || நடிகர் அஜித்துக்குமார் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை - அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் சந்திரா.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார் என்ற செய்திக்கு, நடிகர் அஜித்குமார் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் அளித்துள்ள பேட்டிக்கு, நடிகர்  அஜித்குமார் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர், 'நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகிறார்' என்று தெரிவித்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரின் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"திரு அஜித் குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை, எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith kumar has got no intentions of venturing into politics 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->