எருமை மாடுக்கு ஆசைப்பட்டு, இரண்டாவது திருமண செய்ய முயன்ற பெண்; கடைசில இப்படி ஆயிடுச்சே..!
A woman who wanted a buffalo and tried to get married for the second time
எருமை மாடு வாங்குவதற்காக, முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பெண், கடைசி நேரத்தில் பிடிபட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அரசு சார்பில் இம்மாநிலத்தில், ஏழை எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
இதன்படி, ஹஸன்புர் என்ற இடத்தில் உள்ள கல்லுாரியில், 300 ஜோடிகளுக்கு நேற்று முன்தினம் இலவச திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. இங்கு திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளுக்கு, 35,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களை அரசு வாழணுவதாக அறிவித்து இருந்தது.

இந்நிலையில், 300 ஜோடிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கல்லுாரியில் நேற்று முன்தினம் திரண்டு இருந்தனர். அப்போது, குறித்த ஜோடிகள் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, திருமணம் நடக்கும் அரங்கிற்குள் சிலர் நுழைந்து, அஸ்மா மற்றும் ஜபேர் அகமது என்ற ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அது குறித்து அரசு அதிகாரிகள் விசாரிக்கையில், அஸ்மா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, அஸ்மா என்ற பெண்ணுக்கும், நுார் முகமது என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஆறு மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து பெற்றோருடன் அஸ்மா வாழ்ந்து வந்துள்ளார்.
அத்துடன், இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் நிலையில், மாநில அரசின் இலவச திருமண திட்ட அறிவிப்பை அஸ்மா பார்த்துள்ளார்.அதில், 35,000 ரூபாய் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, அஸ்மாவின் பணத்தாசையை துாண்டியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தன் சொந்தக்கார இளைஞரான ஜபேர் அகமது என்பவரை திருமணம் செய்து கொள்ள, அஸ்மா முடிவு செய்து, பணம் மற்றும் பரிசுப் பொருட்களை இருவரும் சரிசமமாக பிரித்துக் கொள்ள முடிவு செய்து இலவச திருமணத்து தயாராகியுள்ளனர்.
மாநில லாசரு கொடுக்கும் அந்த பணத்தில் எருமை மாடுகள் வாங்கி வியாபாரம் செய்ய அஸ்மா திட்டமிட்டு இருந்துள்ளார். திருமண திட்டத்துக்கு விண்ணப்பித்து, திருமணம் நடக்க இருந்த நேரத்தில் முதல் கணவரின் தந்தை மற்றும் உறவினர்கள் வந்து திருமணத்தை நிறுத்தியதால் அஸ்மாவின் கனவு கலந்துள்ளது.
இதையடுத்து, அஸ்மா மற்றும் ஜபேர் அகமது மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
A woman who wanted a buffalo and tried to get married for the second time