இத்தாலி கார் ரேஸ் பந்தயத்தில் தகுதிச்சுற்றில் அசத்திய அஜித்குமார்..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'குட் பேட் அக்லி' படம் வரும் ஏப்ரலில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஜித்குமார் நடிகராக மட்டுமல்லாமல், கார் பந்தயத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார்.  இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 03-ஆம் இடம் பிடித்து அசத்தியது. அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது சிறப்பித்தது.

இந்நிலையில் தற்போது, இத்தாலியில் நடைபெறவுள்ள 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்கவுள்ளார்.  இதற்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி 03-ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajith Kumar impressed in the qualifying round in the Italian car race


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->