நாக்கில் எச்சில் ஊற வைக்கும் நெய்யப்பம் - எப்படி செய்வது?
how to make neyyappam
இந்தப் பதிவில் சுவையான நெய்யப்பம் எப்படி செய்வது என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:-
அரிசி மாவு
கோதுமை மாவு
பழுத்த வாழைப்பழம்
நறுக்கிய தேங்காய் துண்டுகள்
ஏலக்காய் பொடி
வறுத்த நெய்
எண்ணெய்
செய்முறை:-
முதலில் அடுப்பில் ஒரு வானலை வைத்து சூடானதும் சிறிது நெய் விட்டு அதில் நறுக்கிய தேங்காய் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலில் வெல்லப்பாகு காய்ச்சி எடுத்து வைக்கவும். பின்னர் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து அரைத்து கொள்ளவும். இதையடுத்து வாணலில் அரிசி மாவையும் கோதுமை மாவையும் ஒரு நிமிடத்திற்கு நிறம் மாறாமல் வறுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதனுடன், தயாரித்து வைத்துள்ள தேங்காய் துண்டுகள், அரைத்த வாழைப்பழம் ஆகியவற்றை இட்லி மாவின் பதத்திற்கு கெட்டியாக கலந்து தேவையான உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இப்போது அடுப்பில் பணியார சட்டியை வைத்து சூடானதும் அனைத்து குழியிலும் சிறிதளவு நெய் விட்டு தயாரித்து வைத்துள்ள மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். மாவின் இரு பக்கத்தையும் பொன்னிறம் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான நெய்யப்பம் தயார்.