விஜய் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த அஜித்.. இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்ட தகவல்.!
Ajith Kumar wishes thalapathi 68 for venkat Prabhu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்னும் பெயிரிடப்படாத தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில், தளபதி 68 படத்திற்கான நடிகர்கள் மற்றும் நடிகை தேர்வு நடைபெற்று வருவதாகவும் லியோ படத்தின் ரிலீஸ் நேரத்தில் தான் மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் என்னுடைய மற்ற திரைப்படங்களைப் போலவே என்டர்டெயினராகவும் இருக்கும் எனவும் அரசியல் சார்ந்த படமாக இருக்காது என கூறியுள்ளார்.
மேலும், தளபதி 68 படத்தில் ஒப்பந்தமானதும் நடிகர் அஜித் தான் எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தார் என கூறியுள்ளார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் விஜய்க்கு உங்கள் பட டைட்டிலில் சூப்பர் ஸ்டார் என போடுவிர்களா அல்லது தளபதி போடுவிர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நான் தளபதி என்று தான் போடுவேன் என கூறியுள்ளார்.
English Summary
Ajith Kumar wishes thalapathi 68 for venkat Prabhu