தனுஷ் இயக்கத்தில் அஜித் ; உறுதி செய்த தயாரிப்பாளர்..?
Ajith to direct Dhanush Confirmed producer
தென்னிந்திய நடிகர் தனுஷ் தற்போதும் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் இயக்கத்தில் வெளியான 'பவர் பாண்டி', 'ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்ததாக தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் அண்மையில் வெளியாகி கலவையான நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.
தற்போது, தனுஷ் இயக்கத்தில் 04-வது படமாக 'இட்லி கடை' திரைப்படம் உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். இந்த இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனிடையே இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், திரைப்படத்தின் சில காட்சிகளின் இன்னும் படப்பிடிப்பு முடியாததால் திரைப்படம் அந்த தேதியில் வெளியாகாது எனவும், புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம் என தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் சமீபத்தில் கூறினார்.
அத்துடன், ஆகாஷ் பாஸ்கரன் அடுத்தது லப்பர் பந்து இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரைப்படம் தயாரிக்கவுள்ளதாக கூறியுள்ளார். சமீப காலமாக தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், அது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அந்த செய்தி உண்மை தான். ஆனால், எல்லாம் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது எனவும், அது குறித்து இப்போது சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
English Summary
Ajith to direct Dhanush Confirmed producer