மாஸாக வெளியான #AK61 அப்டேட்.. ட்ரெண்டாகும் "#துணிவு .! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் கடைசியாக எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்த வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படம் உருவாகி வந்த நிலையில் வலிமை அப்டேட் கேட்டு ஒருவரையும் விடாமல் அஜித் ரசிகர்கள் தொந்தரவு செய்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

அதனைத்தொடர்ந்து அடுத்ததாக இதே கூட்டணி தொடர்கிறது அஜித்தின் AK61 என்று குறிப்பிடப்படும் திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்க எச் வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் AK61 படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி இப்படத்திற்கு "துணிவு" என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ak 61 update movie name as thunivu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->