தண்டவாளத்தில் விரிசல் - திண்டிவனம் அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


சென்னை எழும்பூரில் இருந்து இன்று காலை 6 மணிக்கு புதுச்சேரிக்கு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரெயிலில் பயணம் செய்த நிலையில், இந்த ரெயில் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் திடீரென அதிகப்படியான சத்தம் கேட்டது. 

இதையறிந்த லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தி விட்டு சம்பவம் குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் சோதனை செய்தபோது விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளம் சரிசெய்யப்பட்டு ரெயில் திண்டிவனம் நோக்கி சென்றது. 

இருப்பினும், ரெயில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் உரிய நேரத்திற்கும் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். தண்டவாள விரிசலை லோகோ பைலட் முன்கூட்டியே கணித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

crack in railway track near dindivanam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->