மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது - உச்சநீதிமன்றம் ஆவேசம்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பல்வேறு காரணங்களால் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த நிலையில் ஏரா லக்னோ மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரணை செய்த போது "நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது தொடர்பாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்த நிலையில், மருத்துவ இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

லக்னோ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களை வருகிற 30-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், காலியாக உள்ள என்.ஆர்.ஐ. இடங்களையும் பொதுப்பிரிவில் சேர்த்து கலந்தாய்வு நடத்தலாம்.

நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நேரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court order fill vacancy in medical colleges


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->