தமிழகம் முழுவதும் விரைவில் மக்கள் மருந்தகம் தொடக்கம் - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வெள்ளி விழா கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற தேசிய மருந்தாளுநர் மாநாட்டில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவியல் மலரினை வெளியிட்டார். பிறகு சிறந்த மருந்தாளுநர்களுக்கும், மருத்துவம் சார்ந்த பல்வேறு துறையில் உள்ள மருத்துவ வல்லுநர்களுக்கும், மருந்தியல் மாணவார்களுக்கும் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது:- "சமீபத்தில் 946 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் அனைவருக்கும் கலந்தாய்வு நடத்தி அவரவர் விரும்பும் இடங்களுக்கே பணி ஆணைகள் தரப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். 

திமுக அரசு பொறுப்பேற்றபிறகு 24,000 மருத்துவம் சார்ந்த பணிநியமனங்கள் முறையாக நடைபெற்றிருக்கிறது. கலந்தாய்வு மூலம் 34,000த்திற்கும் மேற்பட்ட பணியிடமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. வரும் 05.01.2025 அன்று 2,553 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற உள்ளது.

முதலமைச்சர் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மக்கள் மருந்தகம் தமிழ்நாட்டில் 1000 இடங்களில் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 Generic மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

மிக விரைவில் அந்தப் பணிகள் முடிவுற்றபிறகு முதலமைச்சரால் தமிழ்நாட்டில் 1000 மக்கள் மருந்தகங்கள் கூட்டுறவுத்துறையும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஒருங்கிணைந்து இந்தச் சேவை தொடங்கப்படவிருக்கிறது" என்றுத் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் தமிழ்நாடு மருத்துவர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி, பதிவாளர் கே.சிவசங்கீதா, இந்திய மருந்தியல் கழகத்தின் தலைவர் எஸ்.மணிவண்ணன், துணை தலைவர் ஜெ.ஜெயசீலன், மருந்தியல் கல்லூரியின் முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister m subramaniyan info peoples medical open in tamilnadu coming soon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->