சர்ப்ரைஸ் கொடுத்த ஆலியா பட்.. கர்ப்பமான வயிற்றுடன் சமீபத்திய வீடீயோ வைரல்.! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே காதலித்து வந்தனர். இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களது திருமணத்தில் பாலிவுட், கோலிவுட் என்று பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்ட வாழ்த்தினர். திருமணத்திற்கு பின் ஆலியா பட் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக சில தகவல்கள் வெளிவந்தது.

அதை ஆலியா பட் மூன்று மாதத்தில் உறுதிப்படுத்தினார். மருத்துவமனையில் செக்கப் செய்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று அவர் தெரிவித்து இருந்தார்.இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

 பின்னர் ரன்பீர் கபூர் இரட்டை குழந்தை பிறக்க உள்ளதாக ஒரு பதிவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இத்தகைய சூழலில் கர்ப்பமான, உப்பிய வயிற்றுடன் நடிகை ஆலியா பட் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வாழ்த்துக்களை பெற்று வருகிறது. இவர்கள் டிசம்பர் மாதத்தில் குழந்தை பெற்றுக் கொள்வார்கள் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alia Bhatt recent pregnant video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->