சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறையின் அதிகார துஷ்பிரயோகம் - இயக்குனர் ஷங்கர் கொந்தளிப்பு!
Director Shankar Enthiran story case ED
முன்னணி தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கர், அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எந்திரன் திரைப்படக் கதையின் மதிப்புரிமை மீறல் தொடர்பான வழக்கில், அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பது அதிகார துஷ்பிரயோகம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "எந்திரன் கதையின் உரிமையாளராக அறிவிக்கக் கோரிய அரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்திருப்பது சட்ட செயல்முறையின் அப்பட்டமான சதுஷ்பிரயோகம். அமலாக்கத் துறையின் தொடர் நடவடிக்கையால் வருத்தம் அடைந்துள்ளேன்.
அதிகாரிகள் தங்களது நடவடிக்கை மறுபரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால், அமலாக்கத் துறை நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளேன்.
அசையா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறையிடம் இருந்து தகவல் இல்லை. எந்திரன் படம் தொடர்பாக ஆதரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. எந்திரன் படக் கதையில் மதிப்புரிமை மீறல் நடக்கவில்லை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்தபோதிலும் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன'' என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.
English Summary
Director Shankar Enthiran story case ED