பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி: திடீரென வெளியேறிய சிருஷ்டி....
Prabhu Deva grand dance performance Srushti suddenly leaves
இந்தியாவில் முதன்முறையாக நடைபெற உள்ள பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சியானது, நாளைச் சென்னையில் உள்ள நந்தனம் ஓ.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவில் மைக்கல் ஜாக்சன், நடனப்புயல் பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல்முறையாக நடைபெற உள்ளது. இதில் மிகப் பிரபல நிறுவனமான அருள் ஈவன்ஸ், வி.எம்.ஆர் ரமேஷ், ஜி.ஸ்டார் உமாபதி மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனார்.

நாளை நடைபெற உள்ள இந்த நடன நிகழ்ச்சியானது, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. நடிகரும், இயக்குனருமான ஹரிகுமார் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வை நடத்துகிறார்.
இந்நிகழ்ச்சியில் டைரக்டர்க் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமாகச் செட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்காகப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா ஊடக நண்பர்கள் முன்னிலையில் கடந்த மாதம் கோலாகலமாக நடைபெற்றது.
சிருஷ்டி வெளியேற்றம்
இந்த நடன நிகழ்ச்சியில் நடிகைச் சிருஷ்டி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகைச் சிருஷ்டி தற்போது பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாகச் சிருஷ்டி வெளியிட்டு அறிக்கையில், மரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று கூறி, பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
English Summary
Prabhu Deva grand dance performance Srushti suddenly leaves