திமுக அரசை கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் மட்டுமே, அரசு பள்ளிகளில் சேர முடியும் என்ற உத்தரவு உள்ளது. 2012,- 2013, 2017 மற்றும், 2019ம் ஆண்டுகளில், ஆசிரியர் தேர்வாணையத்தின் வாயிலாக, 'டெட்' என்ற தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.

போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று எட்டு மாதங்களாகியும், பணியாணை வழங்கவில்லை என திமுக அரசை கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகரித்ததால், 2023-இல் சுமார் 40,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர். கடந்த, 2024-மே மாதம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஜூலையில், 2,800 பேர் அடங்கிய உத்தேச தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. 

ஆனால், இதுவரை பனி நியமனங்களுக்கான கலந்தாய்வோ, பணி நியமன ஆணைகளோ வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து விரக்தியடைந்த 1,000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், தங்கள் குடும்பத்துடன், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன், முகத்தில் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் முகமூடியை அணிந்து, கையில் புத்தகங்களுடன் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி வழங்காத, தி.மு.க., அரசின் மெத்தனப்போக்கை, பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்டோரும் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Graduate teachers protest against the DMK government


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->