நடிகை விஜயலட்சுமி மிரட்டப்பட்டுள்ளார்: சீமான் மீதான பாலியல் வன்முறை வழக்கு ரத்து செய்ய முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
NTK Seeman Case Chennai HC Judgement
சென்னை உயர் நீதிமன்றம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்ட பாலியல் வன்முறை வழக்கை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. வசக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பின் விவரம் பின்வருமாறு,
புகார் திரும்பப் பெறப்பட்டதற்கான பின்னணி:
நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது கொடுத்த புகாரை மிரட்டலின் காரணமாக திரும்பப் பெற்றுள்ளதும், இது சுதந்திரமான முடிவாக இருக்க முடியாது என்பதும் நீதிமன்றத்தின் பார்வையில் தெளிவாகியுள்ளது.
வழக்கின் தீவிரத்தன்மை:
பாலியல் வன்முறை குற்றச்சாட்டு மிகுந்த உணர்ச்சி வசப்பட்டதாகக் கருத முடியாது. அவர் அளித்த வாக்குமூலங்கள், சீமான் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
கருக்கலைப்பிற்கான குற்றச்சாட்டுகள்:
விஜயலட்சுமி, சீமானின் கட்டாயத்தால் ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாகவும், மேலும் அவரிடமிருந்து பெருந்தொகை பணம் பெற்றதாகவும் புகார் அளித்துள்ளார்.
தீர்ப்பில் முக்கிய குறிப்பு:
வழக்கின் ஆவணங்களை பரிசீலித்தபோது, விஜயலட்சுமிக்கு சீமான் மீது உணர்ச்சி சார்ந்த எந்த தொடர்பும் இல்லை. அவரது குடும்பத்தினர் திருமணத்திற்காக சீமானை அணுகியதாகவும், திருமண உறுதியளித்த பின்னர் உறவு வைத்துக்கொண்டு, பின்னர் திருமணத்தை மறுத்ததால் புகார் அளிக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
English Summary
NTK Seeman Case Chennai HC Judgement