அமலா பால் நடிப்பில் ''லெவல் கிராஸ்'' ரிலீஸ் அப்டேட்!  - Seithipunal
Seithipunal



தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ. எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு விரைவில் விவாகரத்தும் செய்தார். 

பின்னர் அவரது நண்பர் ஜெகத் தேசாய் உடன் காதல் ஏற்பட்டு கேரளா, கொச்சியில் உள்ள விடுதியில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். 

அமலா பால் நடிப்பில் கடைசியாக வெளியான ஆடு ஜீவிதம், தி டீச்சர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து ஜித்து ஜோசப் இடம் உதவி இயக்குனராக இருந்த அர்பாஜ் அயூப் இயக்கத்தில் நடிகை அமலாபால் ''லெவல் கிராஸ்'' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி வெளியாக உள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை அமலா பால் பாடகையாக முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amala Paul movie Level Cross release update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->