பள்ளி, கல்லூரிகளில் "அமரன்" திரையிட வேண்டும்!....வலியுறுத்தல் ஏற்றுக்கொள்ளப்படுமா?
"Amaraan should be screened in schools and colleges is rape acceptable
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்'. திரைப்படத்திற்கு, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் எல்லையில் பணியாற்றி, வீரமரணம் அடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனின், தியாக வாழ்வையும், காதல் வாழ்க்கையையும் அமரன் எனும் திரைப்படத்தின் மூலம் கலை படைப்பாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கி உள்ளார்.
மேலும், தேச பக்தியை வலியுறுத்தும் அமரன் திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு வழங்க வேண்டும் என்றும், பள்ளி, கல்லூரிகளில் அமரன் திரைப்படத்தை திரையிடவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இத்திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
English Summary
"Amaraan should be screened in schools and colleges is rape acceptable