நான் SC/ST என்பதால் புறக்கணிக்கிறார்கள் - ஈரோட்டை பதறவைத்த திமுக பெண் கவுன்சிலர்! ஆதரவுக்கு வந்த அதிமுக!
Anthiyur DMK Counselor
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேரந்தவர் என்பதால் தன்னை புறக்கணிப்பதாக திமுக பெண் கவுன்சிலர் ஆவேசமாக பேரூராட்சி கூட்டத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்தியூர் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக கவுன்சிலர் கவிதா, தன்னையும், தன் வார்டையும் சாதியை காட்டி புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் திமுக தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், தன்னுடைய வார்டு புறக்கணிக்கப்படுவதாக ஆவணங்களை காட்டி திமுக கவுன்சிலர் கவிதா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் திமுக தலைவர் பாண்டியம்மாள் செய்வதறியாது முழிக்க, திமுக கவுன்சிலர் கவிதாவிற்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக கவுன்சிலர்கள் இருவர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியுள்ளனர்.