அன்புமணி போட்ட டிவிட்! அடுத்த 1 மணிநேரத்தில் CM ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
PMK Anbumani Ramadoss CM Stalin World Wetlands Day Ramsar sites Sakkarakottai Therthangal
உலக ஈரநில தினமான இன்று, தமிழ்நாட்டில் மேலும் இரு ராம்சர் தளங்கள் குறித்து அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இந்த உலக ஈரநில தினத்தன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் என இரண்டு ராம்சர் தளங்களின் பெயரைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இது நாட்டிலேயே மிக உயர்ந்ததாகும். 2021 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஈரநிலங்கள் திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 19 தளங்கள் தொடங்கப்பட்டன.
நமது திராவிட மாடல் அரசாங்கம் ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது மற்றும் நமது வளமான இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்க தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உலக சதுப்புநில நாளில் 'தமிழகத்தின் அனைத்து சதுப்புநிலங்களையும் 2017 விதிகளின் கீழ் உடனடியாக அறிவிக்கை (Notification) செய்ய வேண்டும்' என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
PMK Anbumani Ramadoss CM Stalin World Wetlands Day Ramsar sites Sakkarakottai Therthangal