''இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல்'' - புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல்ஹாசனை, “இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். நீங்கள் எங்கள் அனைவரையும் விட சிறந்த நடிகர்” என அமிதாப் பச்சன் புகழ்ந்துள்ளார்:

தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 'மகாநடி' படத்தை இயக்கியவர் நாக் அஸ்வின். அவரின் இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக தயாராகும் படம் ''கல்கி  2898 ஏ.டி''. 

இந்தப் படத்தில் பிரபாஸ் நாயகனாகவும் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, ராணா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். 

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகக்கூடிய இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தின் அறிமுக விழாவானது அமெரிக்காவின் சான் டியோகோ நகரின் 'காமிக் கான்' எனற சர்வதேச விழாவுடன் நடைபெற்றது. 

இப்படம் குறித்த கலைந்துரையாடலின்போது, பேசிய கமல்ஹாசன், ''படத்தில் நடிக்க நான் ஒப்புகொண்டதற்கு முக்கியமான காரணம் நான் அனலாக் ஃபார்மெட் சினிமாவிலிருந்து வந்தவன். நெகட்டிவ் இல்லாமல் பாசிட்டிவ் இல்லை. 

அதனால் ஒரு படத்தில் நெகட்டிவ் ரோல் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன் வாழும் இந்த காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமை'' என்றார். 

உடனே அதனை குறுக்கிட்ட அமிதாப், ''இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். நீங்கள் எங்கள் எல்லோரையும் விட சிறந்த நடிகர்" என பாராட்டினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitabh Bachchan praises Kamal Hassan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->